Skip to main content

கோரக்பூர் விவகாரம் தவறாக காண்பிக்கப்பட்டுவிட்டது - யோகி ஆதங்கம்

Published on 12/09/2017 | Edited on 12/09/2017
கோரக்பூர் விவகாரம் தவறாக காண்பிக்கப்பட்டுவிட்டது - யோகி ஆதங்கம்

கோரக்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த குழந்தைகளின் தொடர் மரணம் குறித்த செய்திகள் தவறான முறையில் காண்பிக்கப்பட்டுவிட்டன என உத்தரப்பிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டியுள்ளார்.



கடந்த மாதம் உபி மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவமனையில், ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறையில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் என மருத்துவக்கல்லூரியின் தலைவர், மருத்துவர்கள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் சப்ளை நிறுவனத்தின் மேலாளர் என ஏழுபேர் கைதுசெய்யப்பட்டனர்.

இதுகுறித்து ஆங்கில ஊடகமொன்றின் கேள்விக்கு பதிலளித்த யோகி, ‘மருத்துவமனையில் ஏற்பட்ட அசம்பாவிதங்களில் தொடர்புடையவர்களுக்கு வழங்கப்பட்டது ஒன்று கடுமையான நடவடிக்கை அல்ல. கோரக்பூர் மருத்துவமனை மரணங்கள் தவறான முறையில், தவறான தகவல்களுடன் காண்பிக்கப்பட்டுவிட்டன. சிலர் வேண்டுமென்றே மருத்துவமனை நிர்வாகத்தை சிதைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கத்தான் வேண்டும். இந்த தண்டனை அவர்களுக்கான பாடம். பிரச்சனைகள் உண்டாகும்போது அவற்றை சரிசெய்யதான் நாம் இருக்கிறோம். அரசு நிதி ஒதுக்கும்போது அதை சரியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு சேர்த்திருக்க வேண்டும். அரசு மருத்துவமனையில் வேலை செய்பவர்கள், தனியாக மருத்துவமனை நடத்துகிறார்கள்; அரசு பணத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள். ஆக்ஸிஜன் சிலிண்டர்களை சப்ளை செய்யாத நிறுவனம், தவறிழைத்ததுதானே. கோரக்பூர் விவகாரமும், அரசின் நடவடிக்கையும் மக்களுக்கான நல்ல பாடம்’ என தெரிவித்துள்ளார்.

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்