Published on 22/07/2022 | Edited on 22/07/2022
தங்க கடத்தல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு வலியுறுத்திய காங்கிரஸ் தலைமையிலான யூ.டி.எஃபின் கோரிக்கையை முதலமைச்சர் பினராயி விஜயன் மறுத்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள துணை தூதரகத்திற்கு 167 கிலோ தங்கம் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட வழக்கில் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினர், அரசு உயரதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதாக ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, கேரள அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் யூ.டி.எஃப் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது.
இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அதனை கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் நிராகரித்துள்ளார்.