கோவா, டெல்லி, ஆந்திர மாநில சட்டசபை இடைத்தேர்தல்கள்:
வாக்குப்பதிவின் சதவீதங்கள்
தலைநகர் டெல்லி, ஆந்திர மாநிலத்தின் நந்தியால் தொகுதி மற்றும் கோவாவில் பணாஜி மற்றும் வால்போய் தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 7 மணியளவில் முடிவடைந்தது.
ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் நந்தியால் தொகுதியில் 80 சதவீத வாக்குகள் பதிவாகின.
கோவாவின் பணாஜி தொகுதியில் 70 சதவீதமும், வால்போய் தொகுதியில் 79.80 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.
தலைநகர் டெல்லியின் பவானா தொகுதியில் 45 சதவீத வாக்குகள் பதிவாகின.
நேற்று நடந்த சட்டசபை தொகுதி தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் ஆகஸ்ட் 28-ஆம் தேதி நடைபெறுகிறது.