Published on 16/02/2019 | Edited on 16/02/2019
இந்திய சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தை அரசியல் ஆக்க வேண்டாம் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டாலும், அவருடைய கட்சியைச் சேர்ந்த குண்டர்கள் சிலர் ஜம்மு பிரதேசத்தில் இஸ்லாமியர் குடியிருக்கும் பகுதிகளில் வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
![bjp](http://image.nakkheeran.in/cdn/farfuture/mdipfqvmc5i9uQlYYm0m5d22VChIKAOhrHfiSCdS_vc/1550334236/sites/default/files/inline-images/bjp_20.jpg)
இத்தனைக்கும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போதே, இஸ்லாமியர்களின் சொத்துக்களுக்கும் வாகனங்களுக்கும் தீவைத்து வெறியாட்டத்தை ஆடித் தீர்க்கிறார்கள். இதையடுத்து இஸ்லாமியர்கள் மசூதிகளில் தஞ்சம் புகுகின்றனர். பல இஸ்லாமியக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளை சீக்கியர்கள் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
இந்தப் படுகொலையை தேர்தலுக்காகப் பயன்படுத்தும் நோக்கத்தில் பாஜக முனைப்போடு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.