ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கியுள்ளது. மேலும் ரூபாய் 1 லட்சம் பிணைத்தொகை செலுத்தவும், வெளிநாடுகளுக்கு செல்லவும் ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதேபோல் முழு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என உத்தரவு. ஜாமீன் மனு மீதான விசாரணை கடந்த வாரம் முடிந்த நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி அமர்வு தீர்ப்பு.
சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரம் சிறையில் இருப்பதால், தற்போது வெளிவர முடியாது. குற்றப்பத்திரிகை மீதான விசாரணை நாளை மறுநாள் நடக்க உள்ள நிலையில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஆகஸ்ட் 21- ஆம் தேதி சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அமலாக்கத்துறை சிதம்பரத்தை 7 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. வருகிற 24- ஆம் தேதியுடன் சிதம்பரத்தின் காவல் முடியும் நிலையில், அன்றைய தினமே குற்றப்பத்திரிகை மீதான விசாரணை நடைபெறுகிறது.