Skip to main content

நாளை முதல் புழக்கத்திற்கு வரும் புதிய ரூ.200 நோட்டுகள்!

Published on 24/08/2017 | Edited on 24/08/2017
நாளை முதல் புழக்கத்திற்கு வரும் புதிய ரூ.200 நோட்டுகள்!

புதிய ரூ.200 நோட்டுகள் நாளை முதல் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம் இயந்திரங்களுக்கு அனுப்பப்பட்டு, பொதுமக்களின் புழக்கத்திற்கு வரும் என மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ஆம் தேதி பிரதமர் மோடி ரூ.500, ரூ.1000 நோட்டுகளின் மதிப்பு செல்லாது என அறிவித்தார். இதையடுத்து நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. இதை நிவர்த்தி செய்ய புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டன. ஆனால், அவற்றாலும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யமுடியாமல் போனதால், தற்போது ரூ.200 நோட்டுகள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளன.

இதேபோல் புதிய ரூ.50 நோட்டுகளும் அச்சிடப்பட வுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அவை அச்சிடப்பட்டு, வெளியிடப்படுவதற்கான அதிகாரப்பூர்வ தகவல் கூடிய விரைவில் வெளியிடப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ரூ.200 நோட்டுகளில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், எந்த தவறும் இதில் நிகழாது என உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெவ்வேறு அளவுகளில் புதிய ரூ.500 நோட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியெழுப்பியது குறிப்பிடத்தக்கது.

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்