ஃபானி புயல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மேற்கு வங்க முதல் அலுவலகத்தை தொலைபேசி வாயிலாக தொடர்புக்கொண்டார் . ஆனால் அதற்கு மேற்கு வங்க முதல்வர் அலுவலகம் முதல்வர் புயல் பாதித்த மாவட்டத்திற்கு சென்றிருப்பதால் அவர் வந்தவுடன் மீண்டும் அழைப்பதாக தெரிவித்துள்ளது . இருப்பினும் பிரதமர் அலுவலகம் பல முறை மேற்கு வங்க முதல்வருக்கு தொலைபேசியில் தொடர்புக்கொள்ள முயற்சி செய்தது. ஆனால் மேற்கு வங்க முதல்வர் அலுவலகம் அழைப்பை ஏற்க மறுத்துவிட்டது.இதனால் மேற்கு வங்க ஆளுநர் கேசரிநாத் திரிபாதியிடம் பிரதமர் புயல் பாதிப்பு குறித்துக் கேட்டறிந்தார் . பிரதம அலுவலகத்தின் தொலைப்பேசி அழைப்பை ஏற்காததுக் குறித்து பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காலாவதியான பிரதமருடன் பேச விரும்பவில்லை என தெரிவித்தார்.
மேலும் இதுக் குறித்து பேசிய மம்தா பானர்ஜி புயல் நிவாரணத்தை வைத்து மோடி அரசியல் செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.மேற்கு வாங்க முதல்வரின் குற்றச்சாட்டிருக்கு பதிலளித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்கத்தில் உள்ள மக்களை பற்றி கவலையாக உணர்ந்ததால் தான் சூறாவளிக்கு முன்னரே மேற்கு வங்க முதல்வரை தொலைப்பேசியில் அழைத்ததாக கூறியுள்ளார். புயலுக்கு முன் மம்தாவிடம் நான் பேச முயற்சிச் செய்தேன் .ஆனால் அவரின் அகங்காரம் என்னிடம் பேச மறுத்துவிட்டது என்று பிரதமர் கூறினார். ஒடிஷா மாநிலத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று பிரதமர் நரேந்திரமோடி ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார் . பிறகு ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்தார் . பின்னர் ட்விட்டரில் மம்தா மீண்டும் என்னை அழைப்பார் என எதிர்பார்த்திருந்தேன் . ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. மீண்டும் இரண்டாவது எனது அழைப்பையும் ஏற்க மம்தா மறுத்துவிட்டார் என பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.