பீகார் வெள்ளத்துக்கு எலியே காரணம்:
அமைச்சரின் திடுக் ஸ்டேட்மெண்ட்..!
பீகாரில் சமீபத்தில் கனமழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப் பெருக்கில் 500க்கும் அதிகமானோர் பலியானதோடு, கிட்டதட்ட 2 கோடி பேர் இடம்பெயரும் சூழல் ஏற்பட்டது. 19 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன.
இத்தகைய மோசமான பாதிப்புக்கு எலிகளே காரணம் என பீகார் நீர்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'கம்லாபாலன் நதிக்கருகில் வசிப்பவர்கள் தங்கள் தானியங்களை கரையோரமாக சேர்த்து வைத்திருந்தனர். இதனால் எலிகள் அதிகளவில் ஈர்க்கப்பட்டு பொந்துகளை ஏற்படுத்தியதில் நதிக்கரை பலவீனமானது. கடைசியில் கரையுடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என அவர் கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ், நீர்வளத்துறை அமைச்சர் ரஞ்சன் சிங் தான் எலிகளுக்கெல்லாம் பெரிய எலி. நாங்கள் இவர்களை இப்படியே விட்டுவிடப்போவதில்லை என பதிலடி தந்துள்ளார்.
- சுப்பிரமணியன்