Published on 10/09/2018 | Edited on 10/09/2018

இன்று காலை உத்தரபிரதேசம் மாநிலம் மீரட்டிலிருந்து சுமார் 6 கிமீ தொலைவில் கார்காவ்டா பகுதியை மையமாக கொண்டு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 என்ற அளவில் பதிவாகி இருந்த நிலையில் இந்த லேசான நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதேபோல் நேற்று மாலை தலைநகர் டெல்லியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.