Published on 30/08/2018 | Edited on 30/08/2018
கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் சிறப்பு சட்டப்பேரவை இன்று கூட்டப்பட்டது. இக்கூட்டத்தில் கேரளாவில் கனமழையால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கேரளாவில் பேரிடர் பணிகளில், நிவாரண பணிகளில் உதவியர்களுக்கும் அக்கூட்டத்தில் பாராட்டுக்களை தெரிவித்தார் பினராயி விஜயன்.
ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை முதலமைச்சர் நிவாரண நிதியில் ரூ.732 கோடி இருப்பதாக தெரிவித்துள்ளார். இது மத்திய அரசு வழங்கிய நிதியான ரூ.600கோடியை விட 21.7% அதிகமாகும். அதேபோல, வெள்ளத்தால் பாதிப்படைந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10,000 வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இந்த நிதியனது பாதிப்படைந்தவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.