Published on 18/08/2022 | Edited on 18/08/2022
சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட அவசரகால கடனுதவி திட்டம் 2020ஆம் ஆண்டு அக்டோபர் மதம் 31ஆம் தேதி மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தக் கடன் உதவி திட்டத்தின் கீழ் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் கரோனா கால பொருளாதார பாதிப்புகளைச் சீர் செய்ய அந்த நிறுவனங்களுக்கு தகுந்தாற்போல் கடன் உதவி தரப்படும்.
தற்போது அந்தத் திட்டத்தின் வரம்பை 5 லட்சம் கோடியாக அதிகரித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நேற்று நடந்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அவசர கால கடன் திட்டத்தின் வரம்பு 4.50 லட்சம் கோடி ரூபாயில் இருந்து ஐம்பதாயிரம் கோடி ரூபாய் அதிகரித்து 5 லட்சம் கோடி ரூபாயாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.