Published on 29/01/2019 | Edited on 29/01/2019
தூத்தக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவும், ஆலை நிர்வாகத்தின் மனுவும் இன்று விசாரிக்கப்பட்டது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் ஆஜரானார். அவர் வாதாடிய போது, 'தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவிற்கு பின்னும், வேதாந்தா நிறுவனம் விதிகளை பின்பற்றவில்லை. எந்த விதிமுறைகளையும் பின்பற்றாத இந்த ஆலையை மீண்டும் திறக்க கோருகிறார்கள். மேலும் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதற்கான ஆதாரங்கள் தமிழக அரசிடம் உள்ளது. தமிழக அரசு தொழிற்சாலைகளுக்கு எதிரானது அல்ல. ஆனால் சுற்றுசூழல் மாசுபாட்டிற்கு எதிரானது' என தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வாதம் செய்யப்பட்டது.