ஜூன் 1ஆம் தேதிமுதல் இந்தியாவில் உள்நாட்டு விமான சேவைக் கட்டணம் உயர்த்தப்படுகிறது என்று மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, உள்நாட்டு விமானக் கட்டணத்தில் குறைந்தபட்ச வரையறை 13%இலிருந்து 16% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
நாட்டில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், பயணிகள் வரத்து குறைந்தது. இதன் காரணமாக விமான நிறுவனங்கள் பெரும்பாலான வழித்தடங்களில் விமான சேவையை ரத்து செய்தனர். இதனால் விமான நிறுவனங்களுக்கு வருவாய் பாதித்ததால், விமான நிறுவனங்களுக்கு உதவும் வகையில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு விமானத்தில் சாதாரண இருக்கைகள், டீலக்ஸ் இருக்கைகள் உள்ளிட்ட வகுப்புகளுக்கு கட்டணத்தை உயர்த்தி, அதற்கான கட்டண விவரங்கள் அடங்கிய பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச விமான கட்டணம் ரூபாய் 2,300 ஆகவும், அதிகபட்ச விமான கட்டணம் ரூபாய் 24,200 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.