இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை மெல்ல ஓய்ந்து வருகிறது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், கரோனா தடுப்பூசி குறித்த பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது டெல்டா வகை கரோனாவிற்கு எதிராக இந்தியாவில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள் செயல்படுமா எனக் கேள்வியெழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த ராஜேஷ் பூஷன், "கரோனா தடுப்பூசி திட்டத்தில் நாம் பயன்படுத்தும் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு இந்தியத் தடுப்பூசிகளும் டெல்டா வகை கரோனாவிற்கு எதிராகச் செயல்படுகின்றன. ஆனால் அவை எந்த அளவிற்கு, என்ன விகிதத்தில் ஆன்டிபாடிக்கைகளை தயாரிக்கின்றன என்பதை விரைவில் வெளியிடுவோம்" எனக் கூறியுள்ளார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் டெல்டா ப்ளஸ் வகை கரோனா வைரஸ் பற்றிய கேள்விக்கு பதிலளித்த ராஜேஷ் பூஷன், இந்தியாவைத் தவிர அமெரிக்கா, இங்கிலாந்து, போர்ச்சுகல், சுவிட்சர்லாந்து, ஜப்பான், போலந்து, நேபாளம், சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட 9 நாடுகளில் டெல்டா ப்ளஸ் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.