Skip to main content

கேரள ஆளுநர் ஆரிஃப் கானுக்கு எதிரான வழக்கு; உச்சநீதிமன்றம் அதிரடி

Published on 20/11/2023 | Edited on 20/11/2023

 

Case against Kerala Governor Arif Khan; The Supreme Court is in action

 

கேரள ஆளுநருக்கு எதிராக அம்மாநில அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநரின் செயலாளர் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கேரள ஆளுநர் ஆரிஃப் கானுக்கு எதிராக அம்மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. கேரள ஆளும் கட்சிக்கும் ஆளுநருக்கும் தொடர்ந்து பனிப்போர் நிலவி வந்த சூழலில், கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய 8 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆரிஃப் கான் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளார். 3 மசோதாக்கள் 2 ஆண்டுகளாகவும், 5 மசோதாக்கள் 1 ஆண்டாகவும் நிலுவையில் உள்ளன என்று கூறி கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

 

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆளுநரின் செயலாளர் பதிலளிக்க அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு (24.11.2023) ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்