Skip to main content

அரசு பணியாளர் தேர்வாணையம் கலைப்பு - அதிரடி காட்டிய மாநில அரசு

Published on 21/02/2023 | Edited on 21/02/2023

 

nn

 

அரசு பணியாளர் தேர்வாணையத்தை கலைத்து இமாச்சலப்பிரதேச அரசு அதிரடி காட்டியுள்ளது.

 

அரசு பணியாளர் தேர்வு வினாத்தாள் வெளியானதையடுத்து தேர்வாணையத்தை கலைக்கும் முடிவை இமாச்சல் அரசு அதிரடியாக எடுத்துள்ளது. வினாத்தாள் வெளியானது குறித்து துறை ரீதியாகவும் காவல்துறை மூலமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

 

இமாச்சலப்பிரதேசத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாகவே தேர்வாணையத்தின் வினாத்தாள்கள் இடைத்தரகர்களுக்கு தொடர்ந்து தரப்பட்டது நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், புகாருக்குள்ளான தேர்வாணைய ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ள அம்மாநில முதல்வர் சுக்விந்தர், தேர்வாணைய ஊழியர்கள் அனைவரும் வெவ்வேறு துறைகளுக்கு மாற்றப்படுவார்கள் என அறிவித்துள்ளதோடு இமாச்சலப்பிரதேச மாநிலத்தின் தேர்வாணையத்தை கலைத்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்