Published on 01/09/2023 | Edited on 01/09/2023

கர்நாடக மாநிலம் ஹாசன் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பிரஜ்வால் ரேவண்ணாவை தகுதி நீக்கம் செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரஜ்வால் ரேவண்ணா, கடந்த 2019 நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் போது தாக்கல் செய்திருந்த தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் சொத்து விவரங்களையும், தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தவறான தகவல்களையும் அளித்ததற்காக பிரஜ்வால் ரேவண்ணா மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்நிலையில் தவறான தகவல்களை சமர்ப்பித்ததற்காக பிரஜ்வால் ரேவண்ணாவை தகுதி நீக்கம் செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதாதளம் சார்பில் வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் பிரஜ்வால் ரேவண்ணா மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.