Published on 28/05/2022 | Edited on 28/05/2022

உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கூட்டம் அலை மோதுவதால் நான்கு கி.மீ. தூரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
கோடை விடுமுறையையொட்டி, ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள உலக புகழ்பெற்ற ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இதனால் 10 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்யும் நிலை உள்ளது. தரிசனத்திற்காக பக்தர்கள் காத்திருக்கும் வரிசை நான்கு கி.மீ. தூரத்துக்கு நீண்டு கொண்டே செல்கிறது.
கட்டுக்கடங்காத கூட்டம் திருப்பதியில் குவிந்துள்ள நிலையில், தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.