
நிர்பயா குற்றவாளி வினய் சர்மாவின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு.
டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முகேஷ் குமார் சிங், பவன் குமார் குப்தா, வினய் குமார் சர்மா மற்றும் அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 4 குற்றவாளிகளுக்கும் பிப்ரவரி 1-ம் தேதி தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டது.
இதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா தனது தண்டனையை ரத்து செய்யக்கோரி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு நேற்று முன் தினம் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார் என அவரது வழக்கறிஞர் ஏ.பி.சிங் தெரிவித்தார்.
4 பேருக்கும் இன்று (1.2.2020) தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில், 4 பேரில் ஒருவரின் கருணை மனு நிலுவையில் இருப்பதால் மறு உத்தரவு வரும் வரைக்கும் தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்குமாறு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இன்று வினய் சர்மாவின் கருணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங் அனுப்பிய கருணை மனுவை ஜனாதிபதி ஏற்கனவே நிராகரித்துள்ளார்.