Skip to main content

"புதுச்சேரியிலும் ஆகஸ்ட் 31 வரை பொதுமுடக்கம் தொடரும்... புதுச்சேரிக்குள் வர இ-பாஸ் கட்டாயம்" -முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு!

Published on 31/07/2020 | Edited on 01/08/2020

 

 "Curfew will continue in Puducherry till August 31: E-pass compulsory to enter Puducherry" - Chief Minister Narayanasamy announcement!

 

புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கு தளர்வுகள் குறித்த அமைச்சரவைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர்கள், மருத்துவத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் ஊரடங்கினை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும், தளர்வுகள் வழங்குவது குறித்தும், கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டது.

பின்னர் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

 

"மத்திய அரசு 3-ஆம் கட்டமாக  தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு  அறிவித்துள்ளது. இருந்தபோதிலும் புதுச்சேரியில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பால் பல கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 31-ஆம் தேதிவரை புதுச்சேரியில் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. மத நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் விளையாட்டிற்குமான தடை தொடரும். மாநிலத்தில் அனைத்துக் கடைகளும் இரவு 8 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டிருந்தது, தற்போது இரவு 9 மணிவரை கடை திறந்திருக்கலாம்.  இரவு 9 மனி முதல் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு ஆகஸ்ட் 31 வரை அமலில் இருக்கும்.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளே மற்ற மாவட்டத்தை, மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வருவதற்கு இ-பாஸ் கட்டாயம். அதுபோல் வெளியே செல்வதற்கும் இ-பாஸ் தேவை. மாஹேவில் இருப்பவர்கள் கேரளா அரசு அறிவித்துள்ள விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அதேபோன்று ஏனாம் பகுதியிலிருப்பவர்கள் ஆந்திர அரசின் விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும். ஞாயிற்றுக் கிழமை புதுச்சேரியில் ஊரடங்கு இல்லை'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்