புதுச்சேரி காமராஜர், அண்ணா சாலை சந்திப்பில் உள்ள காமராஜர் சிலை முன்பு பெரியார் திராவிட கழகம் சார்பில் மனுதர்ம நூல் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. மனுதர்மம் எரிப்பு போராட்டத்தின் நடுவே இதை கண்டிக்கும் வகையில் பா.ஜ.க மற்றும் இந்து முன்னணி சார்பில் போராட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி பாலாஜி தியேட்டரில் இருந்து 30-க்கும் மேற்பட்டோர் காமராஜர் சிலை நோக்கி ஊர்வலமாக வந்தனர்.
அப்போது ஒருவரை ஒருவர் தாக்கும் வகையில் செருப்பு மற்றும் கற்களை வீசி தாக்கி கொண்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. இரு தரப்பினரும் கற்கள், செருப்பு, பிளாஸ்டிக் வாளி உள்ளிட்டவை மற்றும் கீழே கிடந்த பொருட்களை கொண்டு ஒருவர் மீது ஒருவர் தூக்கி வீசி தாக்கி கொண்டனர். இதில் இந்து முன்னணி தலைவர் சுனில் குமார் மண்டை உடைந்தது. இதேபோன்று காவலர் ஒருவரும் காயமடைந்தார்.
உடனடியாக முதுநிலை காவல் கண்காணிப்பாளர் சுபம் கோஸ் தலைமையில் போலீசார் அங்கிருந்தவர்களை குண்டுக்கட்டாக கைது செய்து அழைத்துச் சென்றனர்.