Published on 13/06/2020 | Edited on 13/06/2020
![covid 19 number of samples tested till date icmr](http://image.nakkheeran.in/cdn/farfuture/w2-PQY3-sxSGJ2Ub8g9qJbkPmOyKtHg768ZLqvq2S1s/1592022985/sites/default/files/inline-images/icmr_0.jpg)
நாடு முழுவதும் இன்று (13/06/2020) காலை 09.00 மணிவரை 55,07,182 மாதிரிகள் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.
அதேபோல் நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,43,737 மாதிரிகள் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் ஐ.சி.எம்.ஆர். குறிப்பிட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் நேற்று (12/06/2020) வரை மொத்தம் 6,73,906 மாதிரிகள் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகள் ஒவ்வொரு நாளும் கரோனா பரிசோதனையை அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.