இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசியான கோவாக்சின் மக்களுக்கு முழு வீச்சில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கோவாக்சின் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள், எளிதாக வெளிநாடு செல்லும் வகையில், கோவக்சினுக்கு உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால அங்கீகாரத்தை பெற அத்தடுப்பூசியை தயாரிக்கும் பாரத் பையோடெக் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
மேலும் பாரத் பையோடெக் நிறுவனம், கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாவது கட்ட பரிசோதனையையும் சமீபத்தில் வெளியிட்டது. இந்தநிலையில் கோவாக்சின் தடுப்பூசியின் சோதனை தரவுகள் நன்றாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை நிபுணர் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். டெல்டா வகை கரோனாவிற்கு எதிராக கோவாக்சின் தடுப்பூசியின் செயல்திறன் குறைவாக இருந்தாலும், ஒட்டுமொத்தமாக தடுப்பூசியின் செயல்திறன் அதிகமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை நிபுணர், கோவாக்சின் தடுப்பூசியின் சோதனை தரவுகள் நன்றாக உள்ளது என தெரிவித்துள்ளதால், விரைவில் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.