பாட்னா சாஹிப் தொகுதியில் இரண்டு முறை பாஜக சார்பாக எம்.பி யாக வென்றவர் சத்ருகன் சின்ஹா.
சமீப காலமாக பாஜக மீது அதிருப்தியில் இருந்த சத்ருகன் சின்ஹா தொடர்ந்து பாஜக தலைமையை விமர்சித்து வந்தார். இந்த ஆண்டு தொடக்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் கலந்துகொண்டார். இந்நிலையில் அவருக்கு இந்த முறை எந்த தொகுதியும் ஒதுக்கப்படவில்லை. இதனையடுத்து அவர் காங்கிரஸ் கட்சியில் இணைவதாக செய்திகள் வெளியானது.
இதனையடுத்து அவர் வரும் 6 ஆம் தேதி அவர் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து சத்ருகன் சின்ஹாவின் மகளும் முன்னணி நடிகையுமான சோனாக்ஷி சின்ஹா தனது தந்தைக்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளார். அவர் கூறுகையில், " வாஜ்பாயி, அத்வானி, எனது தந்தை சத்ருகன் சின்ஹா என யாருக்கும் பாஜக வில் மரியாதை இல்லை. எனது தந்தை இந்த முடிவை முன்பே எடுத்திருக்க வேண்டும். மூத்த தலைவர்களுக்கு உரிய மரியாதை பாஜக வில் வழங்கப்படுவதில்லை" என கூறினார். சோனாக்க்ஷி சின்ஹா தமிழில் ரஜினியுடன் லிங்கா படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.