Skip to main content

வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை; 141 ஆண்டு சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம்

Published on 30/11/2024 | Edited on 30/11/2024
the court sentenced man to 141 years in prison who hit his adopted daughter

பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு 141 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், தாயார் வீட்டில் இல்லாத நேரத்தில் தனது வளர்ப்பு மகளை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு முதல் சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த சிறுமி, தனது ஆலோசனையின் பேரில் போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில், போலீசார் அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கேரளா சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி அஷ்ரப் ஏ.எம் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழகை விசாரித்த நீதிபதி, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 141 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், குற்றவாளிக்கு ரூ.7.85 லட்சம் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். 

சார்ந்த செய்திகள்