Skip to main content

கோரிக்கையை மறுத்த நீதிமன்றம்... ஆர்யன்கானுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு!   

Published on 07/10/2021 | Edited on 07/10/2021

 

Court extends custody of Aryan Khan

 

கடந்த அக்.02 அன்று மும்பையில், கோவா செல்லக்கூடிய சொகுசுக் கப்பல் ஒன்றில் பார்ட்டி நடைபெற்றது. அங்கு தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களுடன் பார்ட்டி நடைபெற்றதாகத் தகவல் கசிய, பார்ட்டியில் பங்கேற்றவர்களைக் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதன் அடிப்படையில், அக்.03 அன்று காலை பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகனான ஆர்யன்கானை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

 

அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஆர்யன்கான் உள்ளிட்ட 8 பேரும் மும்பை விசாரணை நீதிமன்றத்தில் கடந்த 4 ஆம் தேதி ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அக்.7 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டு உரியவர்களிடம் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஆர்யன்கானுக்கு இன்று ஜாமீன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்டவர்களின் என்.சி.பி காவலை அக்.11 வரை நீட்டிக்க வேண்டும் என போதைப் பொருள் தடுப்பு துறையினர் நீதிபதியிடம் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவருக்கும் ( ஆர்யன்கான் உள்ளிட்ட) 14 நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டித்து மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல் இந்த வழக்கில் ஜாமீன் கோரிய ஆர்யன்கானின் மனுவை நாளை மும்பை நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“நீங்கள் தான் ஒரிஜினல்” - வைரல் வீடியோ குறித்து ஷாருக்கான் - மோகன்லால்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
sharukhan mohan lal conversation about mohan lal viral dance video

கேரளா கொச்சியில் சமீபத்தில் நடந்த ஒரு விருது நிகழ்ச்சியில் மோகன்லால் கலந்து கொண்டார். அதில் அவர் ரஜினியின் ஜெயிலர் படத்திலிருந்து ‘ஹுக்கும்...’ பாடலுக்கும் ஷாருக்கானின் ஜவான் படத்திலிருந்து ‘ஜிந்தா பந்தா...’ பாடலுக்கும் மேடையில் நடனமாடினார். அது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. மேலும் மோகன்லால் ரசிகர்களோடு இணைந்து ரஜினி ரசிகர்களும் ஷாருக்கான் ரசிகர்களும் அந்த வீடியோவை அதிகம் பகிர்ந்தனர். 

இந்த நிலையில் ஷாருக்கான் மோகன்லால் நடன வீடியோ குறித்து அவரது எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தார். அந்தப் பதிவில், “இந்தப் பாடலை இப்போது எனக்கு மிகவும் சிறப்பானதாக மாற்றியதற்கு நன்றி மோகன்லால் சார். நீங்கள் ஆடியதில் சரிபாதி அளவு நன்றாக நடனமாடியிருப்பேன் என விரும்புகிறேன். லவ் யூ சார். உங்கள் வீட்டு டின்னருக்காக காத்திருக்கிறேன். நீங்கள் தான் ஒரிஜினல் ஜிந்தா பந்தா” எனக் குறிப்பிட்டிருந்தார். 

ஷாருக்கான் பதிவிற்கு தற்போது மோகன் லால் நன்றி தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் வலைத்தளத்தில் அவர் பகிர்ந்துள்ள பதிவில், “டியர் ஷாருக்கான். உங்களைப் போல் யாராலும் நடனமாட முடியாது.  உங்களது ஒப்பற்ற  உன்னதமான ஸ்டைலில் நீங்கள் தான் ஒரிஜினல் ஜிந்தா பந்தா. உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. வெறும் டின்னர் மட்டும் தானா? பிரேக் ஃபாஸ்ட் கூடாதா?” எனக் குறிப்பிட்டுள்ளார். 

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்த படம் 'ஜவான்'. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் வெளியான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்து நல்ல வரவேற்ப்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

ஷாருக்கான் கடைசியாக ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் டங்கி படத்தில் நடித்திருந்தார். அடுத்த பட அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. மோகன்லால், பிரித்விராஜ் இயக்கத்தில் ‘எல்.2 - எம்புரான்’ மற்றும் தருண் மூர்த்தி இயக்கத்தில் அவரது 360வது படத்தில் நடித்து வருகிறார்.   

Next Story

இறுதி எச்சரிக்கை.... சல்மான் கானுக்கு நிழல் உலக தாதா மிரட்டல்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 Dada threat to Salman Khan

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே அமைந்துள்ளது பாந்த்ரா. இப்பகுதியின் கேலக்சி என்ற பெயர் கொண்ட அடுக்குமாடி கட்டடத்தில் வசித்து வருகிறார் நடிகர் சல்மான் கான். அவருடன் குடும்பத்தினர் ஒன்றாக குடியிருந்து வருகின்றனர். 

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி அதிகாலையில் சல்மான் கான் வீடு அருகே ஹெல்மட் அணிந்து இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் நோட்டமிட்டுள்ளனர். திடீரென அந்த நபர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சல்மான் கான் வீட்டை நோக்கி சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பிரல நடிகர் வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனிடையே, நடந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மும்பை போலீசார் குற்றாவாளிகளைத் தேடிவந்தனர். முதற்கட்டமாக போலீசார், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பயன்படுத்திய பைக்கை, ஒரு கிலோமீட்டர் தூரத்தில் கண்டெடுத்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், விக்கி ப்தா மற்றும் சாகர் பால் என்ற இரண்டு பேரை மும்பை குற்றப்பிரிவு போலிசார் அதிரடியாக கைது செய்தனர்.

தொடர்ந்து, நடிகர் சல்மான் கான் துப்பாக்கி சூடு நடைபெற்ற பிறகு தனது வீட்டில் இருந்து ரசிகர்களைச் சந்தித்தார். ஆனால், துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து இதுவரை நடிகர் சல்மான் கான் எதுவும் வெளிப்படையாக பேசாத நிலையில், “எங்கள் குடும்பத்தினர் இந்தச் சம்பவத்தின் மூலம் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து யார் சொல்வதையும் நம்ப வேண்டாம்” என சல்மான்கானின் சகோதரர் அர்பாஸ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனிடையே, மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை நடிகர் சல்மான் கான், தனது தந்தை சலீம் கானுடன் சந்தித்த வீடியோ வெளியாகியுள்ளது. அதில் அவர்கள் எதுகுறித்து பேசினார்கள் என்ற தகவல் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் இத்துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரபல நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் பொறுப்பேற்றுள்ளார். அவர் வெளிப்படையாக தனது முகநூல் பக்கத்தில் மிரட்டல் விடுத்துள்ளார். அதில், இது டிரைலர்தான் என்றும், இறுதி எச்சரிக்கை என்றும் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், குற்ற சம்பவத்திற்கு பொறுப்பேற்றுள்ள அன்மோல் பிஷ்னோய் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் தொடர்ந்து வந்த நிலையில், துப்பாக்கிச் சூடு வரை சென்று இருப்பது திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு பொறுப்பேற்றது அன்மோல் பிஷ்னோய் ஆக இருந்தாலும், இதற்கெல்லாம் மூளையாக செயல்பட்டது அவரது சகோதரர் லாரன்ஸ் பிஷ்னோய் என்கின்றது மும்பை போலீஸ் வட்டாரம். லாரன்ஸ் பிஷ்னோயிக்கும் சல்மான் கானுக்கும் தனிப்பட்ட முறையில் எந்த வித விரோதமும் கிடையாது. ஆனால், சல்மான் கான், மான் வேட்டையாடியதாக கூறும் விவகாரம்தான் இருவருக்கும் பகையை ஏற்படுத்தியுள்ளது.

சல்மான் கான் வேட்டையாடிய மான்கள, பிஷ்னோய் சமுதாய மக்கள் தெய்வமாக கருதுகின்றனர். இதனால் சல்மான் கான் மான் வேட்டையாடியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று லாரன்ஸ் பிஷ்னோய் கோரிக்கை வைத்தார். மன்னிப்பு கேட்கவில்லையெனில் சல்மான் கானை ஜெய்ப்பூரில் கொலை செய்வோம் என்று லாரன்ஸ் பிஷ்னோய் கடந்த 2018 ஆம் ஆண்டு கோர்ட்டிற்கு வெளியில் மிரட்டல் விடுத்தார். அதன் பிறகு சிறைக்குச் சென்றாலும் தொடர்ந்து தனக்கு என்று ஒரு படையைக் கட்டமைத்துக் கொண்டு லாரன்ஸ் பிஷ்னோய் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்தார். பிரபல கேங்ஸ்டராக அறியப்படும் லாரன்ஸ் பிஷ்னோய் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கிறது. சிறையில் இருந்தாலும், அவர் கொடுத்த டாஸ்க்காகத்தான் இந்தழ் சம்பவம் நடைபெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, தேசிய புலனாய்வு முகமையின் தரவுப்படி, லாரன்ஸ் பிஷ்னோய் கொல்லத்துடிக்கும் 10 பேர் கொண்ட முக்கியஸ்தர்கள் பட்டியலில் சல்மான் கானின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதனால், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து சல்மான் கானுக்கு 11 பேர் அடங்கிய Y+ பாதுகாப்பு அதிகாரிகள் குழு பாதுகாப்பு அரணாக செயல்பட்டு வருகிறது. இப்படியான சூழலில் இந்தச் சம்பவம் நடைபெற்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.