உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. மராட்டியத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவாக மராட்டியத்தில் கரோனா பாதிப்பு என்பது அதிகப்படியாக இருந்து வருகின்றது. நேற்று ஒரே நாளில் இந்தியா முழுவதும் 19,906 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 5,28,859 பேர் நோய்த் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். மராட்டியம் நோய்த் தொற்றில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகின்றது. அங்கு 1,59,133 பேர் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.