அண்மையில் மும்பை ஜெய்ப்பூர் ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் சேத்தன் என்பவர் பயணிகள் நான்கு பேரை சுட்டுக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் பலரை அவர் கொல்ல முயன்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரயிலில் துப்பாக்கிச் சூடு நடத்த முயன்ற சேத்தன் பல பேரை சுட முயன்றுள்ளார். அப்போது அங்கிருந்து பயணிகள் ஒன்றாக சேர்ந்து கூச்சலிட்டுள்ளனர். உடனடியாக அதிகாரிகள் அங்கு வந்ததாகத் தெரியவந்துள்ளது. முன்னதாக புர்கா அணிந்த ஒரு பெண்ணை நோக்கி துப்பாக்கியை சேத்தன் நீட்டிய போது சக பயணிகள் உடனடியாக கூச்சலிட்டனர். அதனால் அந்த பாதுகாப்புப் படை அதிகாரி சேத்தன் அங்கிருந்து சென்று விட்டார். துப்பாக்கி தோட்டாக்கள் தீர்ந்துவிட்டது என ரயிலில் இருந்த பயணிகள் நினைத்த நிலையில், திடீரென ரயிலை விட்டு இறங்கும் முன்பு சேத்தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் பல ரவுண்டுகள் சுட்டுள்ளார். உடனே பயணிகள் கூச்சலிட்டதால் அவர் சுடுவதை நிறுத்தியுள்ளார். அதில் நான்கு பேர் உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒருவேளை பயத்தில் உறைந்து பயணிகள் கூச்சல் போடாமல் இருந்தால் இந்த துப்பாக்கி சூட்டில் பலர் இறந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.