இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. அதேபோன்று கேரளாவில் கரோனா பாதிப்பு குறைவாக இருந்த நிலையில், தற்போது கணிசமான அளவு உயர்ந்து வருகின்றது.
நேற்று மட்டும் கேரளாவில் 885 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 64 பேர் வெளிநாட்டில் இருந்தும், 68 பேர் வெளி மாநிலத்தில் இருந்து கேரளா வந்தவர்கள். நேற்று மேலும் 4 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்ததையடுத்து, அம்மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மொத்தமாக 54 ஆக அதிகரித்து உள்ளது. மாநிலம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,995 ஆக உயர்ந்துள்ளது. 120 பேர் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்ததையடுத்து, இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,564 ஆக உயர்ந்துள்ளது. நோய்த் தொற்று ஏற்றுபட்டு மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்களின் மொத்த எண்ணிக்கை 9,378 ஆக உள்ளது. மாநிலத்தில் சில இடங்களில் கரோனா சமூகப் பரவலாக மாறியுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.