Published on 11/06/2020 | Edited on 11/06/2020
![Corona no social expansion in India--ICMR announces](http://image.nakkheeran.in/cdn/farfuture/Aro5NTdlLHYSFgQDNMgZuirEhUBFsRmMdwtXD37IXFE/1591875218/sites/default/files/inline-images/AFSDGFG_4.jpg)
நாடு முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, தற்போது ஐந்தாம் கட்ட பொதுமுடக்கம் நாடு முழுவதும் அமலில் உள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் தற்பொழுது வரை கரோனா சமூக பரவல் நிலையை அடையவில்லை என ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் பொதுமுடக்கம் காரணமாக கரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. பொதுமுடக்கம் இல்லாவிட்டால் கரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக இருந்திருக்கும். குணமடைந்தோர் விகிதம் 49.2 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.