Published on 09/10/2023 | Edited on 09/10/2023
டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், கர்நாடக முதல்வர் சித்தராமையா, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் மற்றும் இமாச்சல் பிரதேசம் முதல்வர் சுக்விந்தர் சுகு உள்ளிட்ட பல தலைவர்களும், நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
இந்தச் செயற்குழுக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி, நடந்துவரும் இஸ்ரேல் - ஹமாஸ் போரில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு என தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. முன்னதாக இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலை காங்கிரஸ் கட்சி கண்டித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.