Skip to main content

வெளியே கோஷம்... உள்ளே அமைதி; அரசியல் சாசன மாண்பைக் காத்த காங்கிரஸ் எம்.பிக்கள்!

Published on 02/02/2021 | Edited on 02/02/2021

 

congress mp with rahul gandhi

 

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட 16 எதிர்க்கட்சிகள், பட்ஜெட்கூட்டத் தொடரின் தொடக்க நாளன்று குடியரசுத் தலைவர் ஆற்றிய உரையைப் புறக்கணித்தனர்.

 

இந்தநிலையில், நேற்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் அமர்விற்கு, வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் கடந்த இரண்டு மாதமாக தர்ணாவில் ஈடுபட்டு வரும், பஞ்சாப் காங்கிரஸ் எம்.பிக்கள் மூவர் வருகை தந்தனர். அவர்கள், வேளாண் சட்டங்களுக்கு எதிரான வாசகங்கள் பொறித்த கருப்பு உடை அணிந்திருந்தனர். மேலும் அந்த எம்.பிக்கள் நாடாளுமன்றத்தின் முன்பாக இருக்கும் காந்தி சிலையின் முன்பு நின்று, வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் ராகுல் காந்தியைச் சந்தித்தது, தாங்கள் நடத்தி வரும் தர்ணா போராட்டத்தைப் பற்றி தெரிவித்தனர்.

 

இந்த எம்.பிக்கள் மூவரும், வெளியில் கோஷங்களை எழுப்பினாலும், நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது எந்த கோஷங்களையும் எழுப்பாமல் அமைதி காத்தனர். இதுகுறித்து அவர்கள், பட்ஜெட் தாக்கல் என்பது அரசியலமைப்பு நடவடிக்கை என்பதால் அதற்கு இடையூறு ஏற்படுத்தவில்லை எனத் தெரிவித்தனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்