மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் முடிந்த நிலையில், 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த வாரம் பிரதமர் மோடி கர்நாடக மாநிலம் சித்தரதுர்காவில் பிரச்சாரம் செய்ய சென்ற போது அவரது ஹெலிகாப்டரில் இருந்து கருப்பு நிற பேட்டி எடுத்து காரில் வைக்கப்பட்டதாக விடியோக்கள் வெளியானது.
பெட்டியை இரண்டு பேர் தூக்கி செல்லும் அந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில் அந்த கறுப்பு நிற பெட்டி குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்கக் கோரி, காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று மனு அளிக்கப்பட்டது. காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி தலைமையிலான காங்கிரஸ் குழுவினர், தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவை நேரில் சந்தித்து இந்த புகார் மனுவை அளித்தனர்.