Published on 02/03/2019 | Edited on 02/03/2019

இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே காஷ்மீர் எல்லை பகுதியில் நடந்த சண்டையில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வான்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்கு பின் நேற்று அவர் இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டார். இந்நிலையில் இன்று காலை இந்திய விமானப்படை தலைமை அதிகாரி பி.எஸ்.தனோவாவை சந்தித்த அபிநந்தன் பாகிஸ்தான் வசம் காவலில் இருந்த போது என்ன நடந்தது என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து மருத்துவ மேற்பார்வைக்காக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் இந்திய விமானி அபிநந்தன் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அபிநந்தனை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.