Published on 25/04/2019 | Edited on 25/04/2019
மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் மூன்று கட்ட தேர்தல் முடிந்த நிலையில், 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி பேசுகையில், "காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஒரு பொது பட்ஜெட்டும், ஒரு விவசாய பட்ஜெட்டும் தாக்கல் செய்வோம். விவசாய கடன்களுக்கான விவசாயிகள் சிறையில் தள்ளப்படும் அநியாயம் தடுத்து நிறுத்தப்படும். "காவலாளி ஒரு திருடன்” என குஜராத் மக்களே தற்போது கூறத்தொடங்கியுள்ளனர்"என கூறினார்.