
இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் ( NEET - National Entrance Eliglibilty Entrance Exam) எனப்படும் நுழைவுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான நீட் நுழைவுத்தேர்வு தற்போது தமிழகம் உள்பட நாடு முழுவதும் தொடங்கி முடிந்துள்ளது. இன்று (05.05.2024) மதியம் 02.00 மணிக்கு தொடங்கிய நீட் நுழைவுத்தேர்வு மாலை 05.20 மணிக்கு நிறைவு பெற்றது.
2024-25 ஆம் ஆண்டுக்கான இடைநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை மொத்தமாக நாடு முழுவதும் 24 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், 557 நகரங்களில் நீட் தேர்வு எழுதியுள்ளனர். தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் உட்பட 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது. பெரும்பாலான மாணவர்கள் நீட் தேர்வு வினாத்தாள் எதிர்பார்த்த அளவுக்கு எளிதாக இல்லை என கருத்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும் இயற்பியல் பாட கேள்விகள் கடினமாக இருந்ததாகவும், அதிகப்படியான கேள்விகள் NCERT பாடப்புத்தகங்களில் இருந்தே கேட்கப்பட்டு இருந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.