Published on 21/06/2021 | Edited on 21/06/2021
தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சியின் சந்திரசேகர் ராவ் முதல்வராகப் பொறுப்பு வகித்து வருகிறார். துணிச்சலுக்குப் பெயர் போன அவர் மாநிலத்தில் பல்வேறு அதிரடிளை அடிக்கடி செய்வது வழக்கம். அதன்படி இந்தியாவில் முதல் மாநிலமாக கரோனா தொடர்பாக மாநிலத்தில் விதிக்கப்பட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளையும் இன்று முதல் ரத்து செய்து உத்தரவிட்டார் சந்திரசேகர் ராவ்.
இதன் மூலம் தெலங்கானா மாநிலம் மீண்டும் பழைய இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. இதற்கிடையே இன்று சித்திபேட் ஆட்சியர் அலுவலக கட்டட திறப்பு விழாவில் கலந்து கொண்ட சந்திரசேகர் ராவ், கட்டடத்தைத் திறந்து வைத்துச் சிறப்புரையாற்றினார். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அம்மாவட்ட ஆட்சியர் வெங்கடராம ரெட்டி முதல்வரின் காலில் விழுந்து ஆசி பெற்றார். இந்த சம்பவத்தின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.