Skip to main content

தங்கக் கடத்தலில் முதலமைச்சருக்குத் தொடர்பு... கேரள அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள ஸ்வப்னா சுரேஷின் வாக்குமூலம்!

Published on 08/06/2022 | Edited on 08/06/2022

 

Chief Minister involved in gold smuggling ... Swapna Suresh's confession which has caused a stir in Kerala politics!

 

தங்கக் கடத்தல் தொடர்பான வழக்கில் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் தொடர்பிருப்பதாக ஸ்வப்னா சுரேஷ் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்திருப்பது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

 

சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து டிப்ளமாடிக் எனப்படும் தூதரக அதிகாரத்தைப் பயன்படுத்தி பார்சல் மூலம் கேரளாவுக்கு கடத்தப்பட்டது. இந்த வழக்கில், ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ், முதன்மை செயலாளர் சிவசங்கரன் ஆகியோர் கைதாகினர். 

 

நீதிமன்றத்தில் தற்போது வாக்குமூலம் அளித்துள்ள ஸ்வப்னா சுரேஷ், கடந்த 2016- ஆம் ஆண்டு கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் துபாய் சென்ற போது, சிவசங்கரன் அளித்த பணக்கட்டுகள் அடங்கிய ஒரு பை தூதரகம் மூலம் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும், இந்த தங்கக் கடத்தல் வழக்கில் பினராயி விஜயன், அவரது மனைவி கமலா, மகள் வீனா ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார். அவரது வாக்குமூலம் கேரள மாநில அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்