காங்கிரஸ் கட்சியின் விடாப்பிடி பிடிவாதமாக இருப்பது பாஜக ரஃபேல் போர் விமானங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்திருக்கிறது என்று. இது அனைத்தும் தனியார் ரிலையன்ஸ் நிறுவனத்திற்காகத்தான் செய்கிறார் என்று ராகுல் காந்தி கூறிவருகிறார். அப்படி இருக்கையில், காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் மோடிக்கு ஆதரவு அளித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது,
”அந்த ஒப்பந்தத்தில் உள்ள தொழில்நுட்ப அம்சங்களை மத்திய அரசு வெளிப்படுத்த வேண்டும் என எதிர்கட்சிகள் கோருவது அர்த்தமற்றது. அதேசமயம், விலை விவரங்களை வெளியே கூறுவதால் ஒப்பந்தத்துக்கோ அல்லது அரசுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை மக்கள் சந்தேகப்படுவார்கள் என்று நான் நம்பவில்லை. இந்த விவகாரத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனின் முரண்பட்ட தகவல்கள் தான் தேவையற்ற குழப்பங்களை உருவாக்கியுள்ளன’ என்று ஹிந்தி தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.