Published on 01/11/2021 | Edited on 01/11/2021
அக்டோபர் மாதத்தில் மட்டும் ஜிஎஸ்டி வரி வருவாயாக 1,30,127 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. ஜிஎஸ்டி அமலுக்கு வந்ததிலிருந்து வசூலான இரண்டாவது அதிகபட்ச வரி வருவாய் இதுவாகும். இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் 1,41,384 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டதே இதுவரை வசூலான அதிகபட்ச ஜிஎஸ்டி வரி வருவாயாகும்.
தற்போது வசூலிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரி வருவாய், கடந்த வருடம் அக்டோபரில் வசூலான ஜிஎஸ்டி வரி வருவாயை விட 24 சதவீதம் அதிகமாகும். 1,30,127 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வருவாய் வசூலாகியுள்ளது பொருளாதார மீட்சி போக்குடன் ஒத்துப்போவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் செமிகன்டக்டர் விநியோகத்தில் ஏற்பட்ட இடையூறு காரணமாக கார் மற்றும் பிற பொருட்களின் விற்பனை பாதிக்கப்படாமல் இருந்திருந்தால் வருவாய் இன்னும் அதிகமாக இருந்திருக்கும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.