உத்திரபிரதேசத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் 8 -ஆம் வகுப்பு மட்டுமே படித்தவர் அறுவை சிகிச்சை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசம் ஹாம்லி நகரில் நார்தவ் சிங் என்பவர் சொந்தமாக ஆர்யன் என்ற மருத்துவமனையை நடத்திவருகின்றார். எட்டாம் வகுப்புமட்டுமே படித்த இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளார். அவர் அறுவை சிகிச்சை செய்யதை வீடியோ எடுத்த ஒருவர் அந்த விடியோவை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் பெண் கம்பவுண்டர் நோயாளிக்கு மயக்க மருந்து வழங்குவது நர்தவ் அறுவை சிகிச்சை செய்வது போன்ற காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
ஏற்கனவே இந்த மருத்துவமனை விதிமீறல்கள் காரணமாக இதுவரை 3 முறை சீல் வைக்கப்பட்டிருந்து என்றும் ஆனால் அரசியல் கட்சிகளின் தொடர்பில் அந்த மருத்துவமனையின் உரிமையாளர் இருப்பதால் எத்தனை முறை சீல்வைக்கப்பட்டாலும் மீண்டும் திறக்கப்பட்டுவிடுகிறது என்றும் பாதிக்கப்பட்டோர் கூறியுள்ளனர்.
இப்படி விதிமீறி செயல்படும் மருத்துவமனையில் அண்மையில் மட்டும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 20 பேர் இறந்துள்ளனர். இந்நிநிலையில் அந்த மருத்துவமனையில் 8-ஆம் வகுப்புவரை மட்டுமே படித்தவர் அறுவை சிகிச்சை செய்துள்ளார் என்ற தகவல் அந்த பகுதியில் சலலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த அரசு தலைமை மருத்துவர் ஹண்டா இது தொடர்பாக விசாரணை குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.