Published on 01/09/2021 | Edited on 01/09/2021

இந்தியா முழுவதுமுள்ள பல்கலைக்கழகங்களில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் இந்தியப் பல்கலைக்கழகங்களிலும், பல்கலைக்கழகங்களுக்குக் கீழுள்ள உயர்கல்வி நிறுவனங்களிலும் பயிலும் வெளிநாட்டு மாணவர்களின் விவரங்களைச் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் தர அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இதுவரை பல்கலைக்கழகங்களிலும், பல்கலைக்கழகங்களுக்குக் கீழுள்ள உயர்கல்வி நிறுவனங்களிலும் படித்த மாணவர்களின் விவரங்களையும் தருமாறும் மத்திய கல்வி அமைச்சகம் பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.