Skip to main content

டெல்லியில் வெங்காயம் விற்கும் மத்திய அரசு... அலைமோதும் மக்கள் கூட்டம்...

Published on 24/09/2019 | Edited on 24/09/2019

வாழ்க்கையில் நாம் அன்றாட சமையலுக்கு பயன்படுத்த பெரிய வெங்காயம் மிகவும் அவசியமானது. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வெங்காயத்தின்  விலை கடந்த சில வாரங்களாக அதிகரித்தபடியே வருகிறது.   டெல்லி ,சென்னை உட்பட பகுதியில் ரூ.70 முதல் ரூ .80 வரை பெரிய வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

central government sells onion in delhi

 

 

வெங்காயம் அதிகமாக விளையும் மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா, குஜராத், கிழக்கு ராஜஸ்தான், மேற்கு மத்திய பிரதேசம் ஆகிய பகுதிகளில் கடந்த பருவ மழை அதிகமாக பெய்து வருகிறது. இதனால் அங்கு இருந்து வெங்காய வரத்து குறைந்து விட்டது.  இதனால் விலை திடீரென அதிக அளவில் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விலை உயர்வைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு முயற்சியாக டெல்லியில் மத்திய அரசின் நடமாடும் நியாய விலைக்கடை மூலமாக குறைந்த விலைக்கு வெங்காயம் விற்க ஆரம்பித்துள்ளது. இதன்மூலம் ஒரு கிலோ வெங்காயம் 22 ரூபாய் என்ற விலையில் டெல்லியில் விற்கப்படுகிறது. டெல்லி முழுவதும் மக்கள் வரிசையில் நின்று வெங்காயத்தை வாங்கிச் செல்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்