
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கவுள்ளதாக ஏற்கெனவே நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜு தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இந்த குளிர்காலக் கூட்டத்தொடரையொட்டி, அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருக்கிறது.
இது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாவது, ‘நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு, அனைத்துக் கட்சிக் கூட்டம் வரும் நவம்பர் 24-ஆம் தேதி காலை 11 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதான குழு அறையில் நடைபெறும்’ என்று கூறியுள்ளார்.
வரும் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்த கூட்டத்தொடரில், வக்பு சட்ட திருத்தம், ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.