Published on 06/11/2023 | Edited on 06/11/2023

கேரள உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து கேரள அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
மத வழிபாட்டுத் தலங்களில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள பட்டாசுகளை கைப்பற்ற கேரள உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். மேலும் அந்த உத்தரவில் நள்ளிரவு நேரங்களில் பட்டாசு வெடித்து கடவுளை திருப்திபடுத்த வேண்டும் என்று எந்த புனித நூலிலும் குறிப்பிடப்படவில்லை என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மத வழிபாட்டுத் தலங்களில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்ய பிறப்பித்த கேரள உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து கேரள மாநில அரசு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் திருவிழாக்களில் வாணவேடிக்கை என்பது தவிர்க்க முடியாதது என தெரிவித்துள்ளது.