Published on 19/07/2022 | Edited on 19/07/2022
இந்திய இராணுவத்தில் நான்கு ஆண்டுகள் மட்டும் பணிபுரியும் வகையில் புதிய ஆள் சேர்க்கும் முறையான ‘அக்னிபத்’ திட்டத்திற்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதி அளித்தது. இந்த அறிவிப்பு வெளியான நாள் முதல் பீகார், உத்தரப்பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது. இப்பணிகளில் பெறுவோருக்கு பல்வேறு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்கப்படும் என பாஜக ஆளும் மாநில அரசுகளும், மத்திய அரசின் சில துறைகளும் அறிவித்துள்ளன. இருப்பினும், பல்வேறு மாநிலங்களில் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் 'அக்னிபத்’ திட்டத்திற்கு எதிராக பல்வேறு உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுக்கப்பட்ட நிலையில் வழக்குகள் அத்தனையும் டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.