மீண்டும் சோனியா காந்தி தப்புக்கணக்கு போடுகிறார் அவர் கணக்கில் வீக் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்தகுமார் கூறியுள்ளார்.
நேற்று நடந்த மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளே தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர் கேசினேனி சீனிவாஸ் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படுவதாக சபாநாயகர் மகாஜன் அறிவித்தார். அதனை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நாங்கள்தான் பெரிய கட்சி எனவே நாங்கள் கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்க வேண்டும் என முறையிட்டார். பெரிய கட்சியோ சிறிய கட்சியோ கொடுக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. நாளை முழுவதும் நம்பிக்கையில்லா தீர்மானம் பற்றிய விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெறும் எனவே நாளை மற்ற அலுவல் பணிகள் நடைபெறாது என சபாநாயகர் தெரிவித்தார்.
அதெபோல் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்தகுமார் மற்ற கட்சிகளால் கொண்டுவரப்பட்டிருக்கும் நம்பிகையில்லா தீர்மானத்தை சந்திக்க அரசு தயார் என தெரிவித்தார்.
மொத்தம் 535 உறுப்பினர்களை கொண்ட மக்களவையில் பாஜவின் சொந்த எம்பிக்கள் எண்ணிக்கை சபாநாயகர் உட்பட 274. கூட்டணி கட்சிகளின் ஆதரவு என மொத்தம் 313 உறுப்பினர்களின் ஆதரவு பாஜகவிற்கு உள்ளது. இந்நிலையில் மழைக்கால கூட்டத்தொடரில் முதல் நாளான நேற்றே நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்கப்பட்டு நாளை விவாதமும் ஓட்டெடுப்பும் நடக்கவிருப்பது அங்கு சற்று சலசலப்பையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் பாஜகதான் வாக்கெடுப்பில் அதிக ஆதரவுகளை பெரும் என்று கருத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தி எங்களிடம் பெரும்பான்மை இல்லை என்று யார் சொன்னது என்று கேள்வி எழுப்பி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்தகுமார், சோனியா காந்தி 1996-லிருந்த வாஜ்பாய் தலைமையில் நடந்த அரசை நினைவில் வைத்துக்கொண்டு அப்படி பேசுகிறார். வாஜ்பாய் ஆட்சிக்கு பிறகு பாஜகவிற்கு இனி வாய்ப்பே இல்லை என எல்லோரும் கருதினார்கள் ஆனால் தற்போது அந்த எண்ணமே உடைக்கப்பட்டதால்தான் இன்று பாஜக ஆட்சியை பிடித்துள்ளது.
சோனியா காந்தி மீண்டும் தப்புக்கணக்கு போட்டுள்ளார். பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எங்களுக்குத்தான் பெரும்பான்மை. எங்களுக்கு கிடைக்கும் ஆதரவை நாளைக்கு காண்பீர்கள் எனக்கூறியுள்ளார்.