![Car overturned in river incident Saidai Duraisamy son issue](http://image.nakkheeran.in/cdn/farfuture/m8JcBa2IouLWX04Qd8YMGuCMoa50GtNVKtWW4BOHUOM/1707101953/sites/default/files/inline-images/vetrri-duraisaamy-art.jpg)
இமாச்சலப் பிரதேசத்தில் நிகழ்ந்த கார் விபத்தில் சிக்கி சைதை துரைசாமியின் மகன் மாயமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் கஷங் நாலா என்ற பகுதியில் உள்ள சட்லஜ் நதிக்கரையின் அருகே அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி உள்ளிட்ட 3 பேர் காரில் பயணம் செய்துள்ளனர். அப்போது இவர்கள் சென்ற கார் நேற்று மாலை விபத்துக்குள்ளாகி சட்லஜ் நதியில் விழுந்துள்ளது. இது குறித்து இமாச்சலப் பிரதேச போலீசார் சென்னை போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
மேலும் காரில் வெற்றி துரைசாமியுடன் பயணித்த திருப்பூரைச் சேர்ந்த அவரது நண்பர் கோபிநாத் என்பவர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். கார் ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். விபத்தில் சிக்கி மாயமான வெற்றியை போலீசார் மற்றும் மீட்புப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.