Published on 29/06/2021 | Edited on 29/06/2021
இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரை ஜூலை 19ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 13ஆம் தேதிவரை நடத்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு பரிந்துரைத்துள்ளது. இதன்மூலம் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19ஆம் தேதி தொடங்குவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.
இந்த மழைக்கால கூட்டத்தொடரில் முக்கிய விமான நிலையங்கள் தொடர்பான சட்டம், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலன் (திருத்த) மசோதா, சிறார் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) திருத்த மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ளன.
மேலும், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சனையைத் தீர்க்கும் குழு அமைப்பதற்கான சட்டமும் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.