கர்நாடகா காங்கிரஸ் கூட்டம் ஒன்றில் காங்கிரஸ் தலைவர்கள் இரண்டு பேர், மைக் செயல்பாட்டில் இருப்பது தெரியாமல், அம்மாநில காங்கிரஸ் தலைவரின் ஊழல் குறித்து பேசியது தொடர்பான வீடியோ அண்மையில் வெளியாகி பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தற்போது மீண்டும் அதேபோன்ற வீடியோ வெளியாகியுள்ளது. இந்திரா காந்தியின் நினைவுநாள் கூட்டத்தில் கர்நாடகா காங்கிரஸ் தலைவர் சிவகுமாரும், சித்தராமையாவும் பேசிக்கொள்வது போல் வெளிவந்துள்ள அந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவிவருகிறது.
அந்த வீடியோவில் இந்திரா காந்தியின் படம் மாட்டப்பட்டுள்ள நிலையில், சித்தராமையா, "இன்று வல்லபாய் படேலின் பிறந்தநாள். அவருடைய படம் இல்லையா?" என கேள்வி எழுப்புகிறார். அதற்கு காங்கிரஸ் தலைவர் சிவகுமார், "ஆமாம்.. இன்று அவரது பிறந்தநாளும்தான். ஆனால் நாம் அவரது படத்தை வைப்பதில்லை" என்கிறார்.
அதற்கு சித்தராமையா, "ஆனால் பாஜக இதை சாதகமாக்கிக்கொள்ளும்" என கூறுகிறார். இதனையடுத்து சிவகுமார், அங்குள்ள ஒருவரிடம் வல்லபாய் படேல் படம் இருக்கிறதா? எனக் கேட்டு, அதை எடுத்து வரச் சொல்கிறார். இதனைத்தொடர்ந்து வல்லபாய் படேல் புகைப்படம் அங்கு வைக்கப்படுகிறது.
.@INCKarnataka in soup again. @siddaramaiah & @DKShivakumar are heard conversing over the absense of Vallabhai Patel's photo on the occasion of his birth anniversary when they were celebrating Indira Gandhi's death anniversary. He's also says #BJP would mock them if they didn't. pic.twitter.com/eczLslEf3s
— Suraj Suresh (@Suraj_Suresh16) November 24, 2021
இந்த வீடியோ தொடர்பாக காங்கிரஸ் கட்சியைப் பாஜக விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.